Saturday, May 3, 2008

க‌ண‌வ‌ன்மார்க‌ளுக்கு ஓர் எச்ச‌ரிக்கை!

==========க‌ண‌வ‌ன்மார்க‌ளுக்கு ஓர் எச்ச‌ரிக்கை!============
ஆடி மாத‌ம் துவ‌ங்கி, அடுத்த‌ ஆடிவ‌ரை உங்க‌ள் அரும‌ந்தி.....ஸாரி....அரும‌ந்த‌ ம‌னைவியின் ஆசையை நிறைவேற்ற‌ நீங்க‌ள் ஊரிலுள்ள துணிக்கடைக‌ளுக்கெல்லாம் சோற்று மூட்டையுடன் 'சுற்றுலா" போவ‌து போதாதென்று, உங்க‌ள் பொறுமையையும், "ப‌ர்ஸையும்" சோதிக்கும் க‌ஷ்ட‌ கால‌மும் வ‌ந்துவிட்ட‌து "அட்ஷ‌ய‌ திரிதியை" என்ற‌ பெய‌ரில்! இது அவ‌ர்க‌ளுக்கு "பொன்னான‌ கால‌ம்" என்றால் ஆண்க‌ளாகிய‌ ந‌ம‌க்கு "ம‌ண்ணாகும் கால‌ம்". அடுத்த‌ வீட்டுக்காரி அரை ச‌வ‌ர‌ன் வாங்கினால், தான் ஆறு ச‌வ‌ர‌ன் வாங்கி ஆட்டிக்கொண்டு அலைய‌ நினைக்கும் ஆசைபிடித்த‌ பெண் ஜென்ம‌ங்க‌ள் ம‌னைவிக‌ளாக வாழும் யுக‌ம் இது! ம‌னைவி உங்க‌ளிட‌ம் "அட்ஷ‌ய‌ திரிதியை அன்னிக்கு த‌ங்க‌ம் ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்தா, ல‌ட்சுமி க‌டாட்ச‌ம் பொங்குமுங்க‌!" என்று உங்க‌ளுக்கு தூப‌ம் போட்டால், ம‌சிய‌வேண்டாம். "நீயே என‌க்கு த‌ங்க‌ம் தானேடி! நீயே இந்த‌ வீட்டுக்கு ல‌ட்சுமிதானேடி!" என்று "சோப்பு போட்டு" பாருங்க‌ள். ம‌சிந்தால் அது உங்க‌ள் அதிர்ஷ்ட‌ம்....இல்லையேல் அது உங்க‌ள் த‌லையில் அந்த‌ ப்ர‌ம்மா ஸ்ட்ராங்கா எழுதி வ‌ச்ச த‌லையெழுத்து!
> அப்பாவிக் க‌ண‌வ‌ண்மார்க‌ளின் ம‌ன‌ந‌ல‌ம் காக்கும் இர‌க்க‌சிந்த‌னையுட‌ன் இந்த‌ அறிவுரையை வ‌ழ‌ங்குப‌வ‌ர்.... > கிரிஜா ம‌ணாள‌ன்.


1 comment:

GIRIJAMANAALAN said...

இக்கட்டான சமயத்துல நல்ல யோசனை சொன்னீங்க சார்! ரொம்ப தாங்க்ஸ்ங்க!

- மங்களம் மைந்தன், திருவெறும்பூர், தமிழ்நாடு.