Wednesday, April 30, 2008

உங்க‌ளை எதுக்கு சிரிக்க‌ச் சொல்றோம்னா...........

உட‌ம்புல‌ இருக்க‌ற‌ உறுப்புக்க‌ளை ஆரோக்கிய‌மா வ‌ச்சிக்கிற‌துக்காக‌ நாம் தின‌மும் உட‌ற்ப‌யிற்சி செய்ய‌றோம். ஜிம்முக்குப் போற‌தும், அப்ப‌டி வ‌ச‌தியில்லாத‌வ‌ங்க வீட்டுலேயே கைய‌க் காலை ஆட்டியும், த‌ண்டால், ப‌ஸ்கி எடுத்து மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க நிக்க‌ற‌தும், வாக்கிங் போறேன்க‌ற‌ பேர்ல‌ தெருத் தெருவா ந‌ட‌க்க‌ற‌தும் உட‌ற்ப‌யிற்சிதான். இதுக‌ளோட‌, தின‌மும் கொஞ்ச‌நேர‌ம் வாய்விட்டு சிரிக்க‌ற‌தையும் ஒரு உட‌ற்ப‌யிற்சியாய் ப‌ண்ணிப்பாருங்க. ந‌கைச்சுவையைக் கேட்டு ர‌சிச்சி சிரிக்க‌ற‌து ஒரு அருமையான‌ உட‌ற் ப‌யிற்சிங்க‌ற‌தை ம‌ற‌ந்துடாதீங்க‌! ந‌ம்ம‌ உட‌ம்புல‌ ஏற்ப‌டுற‌ காய‌ங்க‌ள், ர‌ண‌ங்க‌ள் இதுக‌ளை ஆற‌ச்செய்ற‌துக்குன்னு 'நியூரோபேப்டைட்ஸ்' என்கிற‌ திர‌வ‌ம் சுர‌ந்துக்கிட்டே இருக்கும். இந்த திர‌வ‌த்தை அதிக‌மா சுர‌க்க‌ச்செய்ற‌ ஆற்ற‌ல் 'சிரிப்பு'க்கு இருக்க‌ற‌தா ம‌ருத்துவ‌ விஞ்ஞானிக‌ள் க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. ம‌ன‌சுல‌ இறுக்க‌ம், க‌வ‌லை, ப‌ட‌ப‌ட‌ப்பு, ந‌டுக்க‌ம் இதுக‌ள் ஏற்ப‌ட‌ற‌து ந‌ம்ம‌ உட‌ம்புல‌ சேருற low density lippo ப்ரோட்டீன்க‌ள்'க‌ளால் தான். நாம் வாய்விட்டுச் சிரிக்கும்போது, இந்த‌ L.D.L. ப்ரோட்டீன்க‌ள்' இய‌ல்பு நிலையை அடைவ‌தால், ம‌ன‌சு ரிலாக்ஸ் ஆகி, ப‌ட‌ப‌ட‌ப்பு, ந‌டுக்க‌ம் இதுக‌ள் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ ஓடிவிடும்! இத‌ய‌மும் ர‌த்த‌ ஓட்ட‌த்தால் சீரடைந்து, அத‌ன‌ல் உள்ளுறுப்புக்க‌ள் எல்லாமே சீரா வேலை செய்ய‌ ஆர‌ம்பிச்சுடும்! வாய்விட்டுச் சிரிக்கிற‌து, உள்ளுறுப்புக் க‌ளைச் சீராக‌ வ‌ச்சுக்க‌ ந‌ம் செய்ற‌ 'ஜாகிங்' மாதிரின்னும் சொல்றாங்க‌ ம‌ருத்துவ‌ விஞ்ஞானிக‌ள். அத‌னால‌தான், சிரிங்க‌, சிரிங்க‌, ந‌ல்லா வாய்விட்டுச் சிரிங்க‌, அந்த‌ சான்ஸ் இல‌வ‌ச‌மா கிடைக்க‌ற‌துக்கு அடிக்க‌டி ஹ்யூம‌ர் க்ள‌ப் நிக‌ழ்ச்சிக‌ளுக்குப் வாங்க‌ன்னு எல்லாரையும் அழைக்கிறோம். புரியுதுங்க‌ளா? இதைப் ப‌டிச்சுட்டு, ஏதோ லேசா ஒரு ஸ்மைல் ப‌ண்ணிட்டு பேசாம‌ இருந்துடாதீங்க! சிரிப்பு'ங்க‌ற‌து உங்க‌ளுக்கு இல‌வ‌ச‌மா கிடைக்க‌ற ட்ரீட்மெண்ட். அதைத் தேடிப்போற‌துல அச‌ட்டையா இருந்தா, உங்க‌ உட‌ம்புல‌ இருக்க‌ற‌ உறுப்புக‌ளும் த‌ம் க‌ட‌மையை அச‌ட்டை ப‌ண்ணி.................அப்புற‌ம் என்ன‌ ஆகும்னு உங்க‌ளுக்கே புரியுதுதானே?
"வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகும்"க‌ற‌து வெறும் அடுக்குமொழி வாக்கிய‌ம் ம‌ட்டுமில்லே, அதை ம‌ற‌ந்துடாதீங்க‌!

கிரிஜா ம‌ணாளன் ... த‌ஞ்சை தாமு

Humour Club Of Thanjavur

Tamilnadu, South India.

சுறுசுறுப்பான மாணவர்கள்!

ஒரு கல்லூரிப் பேராசிரியரைக் கடத்திக்கொண்டுபோன கும்பலிடமிருந்து அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு போன் வந்தது. "டேய் பசங்களா! உங்க புரொபசரை உயிரோட கொண்டுவந்து விடணும்னா, 5000 ரூபாயை நாங்க சொல்ற இடத்துக்கு நீங்க கொண்டுவந்து தரணும்!இல்லேன்னா .....அவரை பெட்ரோல் ஊத்தி எரிச்சிடுவோம்! புரியுதா? என்ன பசங்களா, கொண்டு வர்றீங்களா?" என்று சொல்லி வரவேண்டிய இடத்தையும் சொன்னார்கள்.

அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரும் அவசரம் அவசரமாக தத்தம் வண்டிகளில் விரைந்தார்கள் .......கையில் ஆளுக்கொரு பெட்ரோல் டின்னுடன்!
(ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர், த‌மிழ்நாடு)

Tuesday, April 29, 2008

சிரிப்புதான் இதய‌‌த்தின் இசை!
==========================
சிந்திப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது ச‌த்திய‌த்தின் பிற‌ப்பிட‌ம். ப‌டிப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது அறிவின் ஊற்று. உழைப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது வெற்றியின் விலை. ந‌ட்புக்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது ம‌கிழ்ச்சிக்கு வ‌ழி. சிரிப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது இத‌ய‌த்தின் இசை!
என‌வே, உங்க‌ள் இத‌ய‌ அர‌ங்க‌த்தில் எப்போதும் சிரிப்பின் அலைக‌ள் மித‌ந்து கொண்டேயிருக்குமாறு, நீங்க‌ள் உங்க‌ள் ந‌கைச்சுவை உண‌ர்வைப் பெருக்கிக் கொண்டால் அங்கு எந்த இறுக்க‌ங்க‌ளும், க‌வ‌லைக‌ளும் உட்புகாது. எப்போதும் சிரித்த‌முக‌மே எல்லோருக்கும் பிடித்த‌ முக‌ம்! சிரிப்போம்! சிற‌ப்போம்!
"ம‌னம்விட்டு சிரிப்ப‌த‌ற்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்...அது ஆத்மாவின் இசை! ந‌ட்புக்கு நேர‌ம் ஒதுக்குங்க‌ள்.... அது ம‌கிழ்ச்சிக்குச் செல்லும் பாதை!"
....இது ஐரீஷ் நாட்டு தேசிய‌ கீத‌த்திலுள்ள‌ வ‌ரிக‌ள்.
(மீண்டும் ச‌ந்திப்போம்)

அன்புள்ள‌ வாச‌க‌ர்க‌ளுக்கு, வ‌ண‌க்க‌ம்.

முற்றிலும் ந‌கைச்சுவைக்கே முத‌லிட‌ம் அளித்து இணைய‌ வாச‌க‌ர்க‌ளை ம‌கிழ்விக்க‌ ஓர் வ‌லைப்ப‌திவைத் துவ‌ங்க‌வேண்டும் என்ற‌ என‌து நீண்ட‌ கால‌ ஆவ‌லுக்கு வித்திட்ட‌ திரும‌தி கோம‌தி ந‌ட‌ராஜ‌ன் அவ‌ர்க‌ளுக்கு முத‌ற்க‌ண் என‌து ந‌ன்றி. 30 ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ த‌மிழ்நாட்டின் அனைத்து இத‌ழ் க‌ளிலும் ந‌கைச்சுவை வ‌ழ‌ங்கி நான் பெற்ற‌ அனுப‌வ‌ங்க‌ள் இந்த‌ வ‌லைப்ப‌திவு முய‌ற்சிக்கும் உத‌வி, வாச‌க‌ர்க‌ளை ம‌கிழ்விக்கும் என்ற‌ ந‌ம்பிக்கையுட‌ன் உங்க‌ள் ஒத்துழைப்பை வேண்டி, இந்த‌ வ‌லைப்ப‌திவில் நுழைகிறேன். வ‌ண‌க்க‌ம்.
> கிரிஜா ம‌ணாள‌ன்.