Sunday, May 4, 2008

====== சிரிப்பை இழந்தவர்! ======

எங்கள் தஞ்சாவூர் நகைச்சுவை மன்றத்தின் நிகழ்ச்சியில் முன் வரிசையில் உட்கார்ந்து, மிகவும் ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்த ஒருவரை உன்னிப்பாகக் கவனித்த நான், நிகழ்ச்சி முடிந்து அவர் அரங்கத்தைவிட்டு வெளியே செல்லும்போது, அவரிடம் நிகழ்ச்சியைப்பற்றி கருத்தை அறியலாமென்று அவரை நெருங்கினேன். அவரது முகத்தில் சோகலட்சுமி தாண்டவமாடிக்கொண்டிருந்தாள்!
"என்ன சார், உள்ளே அப்படி குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சுக்கிட்டு இருந்தீங்க..... அதுக்குள்ளே இப்படி மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கிட்டு வீட்டுக்குப் போறீங்களே?" என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில்: "ம்...ம்....ம்...ம்...ம்...வூட்டுக்குப்போயி, என் வீட்டுக்காரி டீவி பாத்து முடிச்சு, எனக்கு ராத்திரி சாப்பாடு போடுற வரைக்கும் காத்துக் கெடக்கணுமே........என்னோட அந்த நெலைமையைப் புரிஞ்சுக்காம விசாரிக்க வந்துட்டீங்களாக்கும்!......போங்க சார்!"

(கவலையோடு வரும் மனங்களை நகைச்சுவை மருந்தால் குணப்படுத்தி, நாம் அனுப்பிக்கொண்டிருக்க, அவைகளை மீண்டும் நோயாளியாக்கும் இப்ப்படிப்பட்ட 'வைரஸ்' கிருமிகளை ஒழிக்க நாம் என்னசெய்வது?) - கிரிஜா மணாளன்.

No comments: