Wednesday, April 30, 2008

உங்க‌ளை எதுக்கு சிரிக்க‌ச் சொல்றோம்னா...........

உட‌ம்புல‌ இருக்க‌ற‌ உறுப்புக்க‌ளை ஆரோக்கிய‌மா வ‌ச்சிக்கிற‌துக்காக‌ நாம் தின‌மும் உட‌ற்ப‌யிற்சி செய்ய‌றோம். ஜிம்முக்குப் போற‌தும், அப்ப‌டி வ‌ச‌தியில்லாத‌வ‌ங்க வீட்டுலேயே கைய‌க் காலை ஆட்டியும், த‌ண்டால், ப‌ஸ்கி எடுத்து மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க நிக்க‌ற‌தும், வாக்கிங் போறேன்க‌ற‌ பேர்ல‌ தெருத் தெருவா ந‌ட‌க்க‌ற‌தும் உட‌ற்ப‌யிற்சிதான். இதுக‌ளோட‌, தின‌மும் கொஞ்ச‌நேர‌ம் வாய்விட்டு சிரிக்க‌ற‌தையும் ஒரு உட‌ற்ப‌யிற்சியாய் ப‌ண்ணிப்பாருங்க. ந‌கைச்சுவையைக் கேட்டு ர‌சிச்சி சிரிக்க‌ற‌து ஒரு அருமையான‌ உட‌ற் ப‌யிற்சிங்க‌ற‌தை ம‌ற‌ந்துடாதீங்க‌! ந‌ம்ம‌ உட‌ம்புல‌ ஏற்ப‌டுற‌ காய‌ங்க‌ள், ர‌ண‌ங்க‌ள் இதுக‌ளை ஆற‌ச்செய்ற‌துக்குன்னு 'நியூரோபேப்டைட்ஸ்' என்கிற‌ திர‌வ‌ம் சுர‌ந்துக்கிட்டே இருக்கும். இந்த திர‌வ‌த்தை அதிக‌மா சுர‌க்க‌ச்செய்ற‌ ஆற்ற‌ல் 'சிரிப்பு'க்கு இருக்க‌ற‌தா ம‌ருத்துவ‌ விஞ்ஞானிக‌ள் க‌ண்டுபிடிச்சிருக்காங்க‌. ம‌ன‌சுல‌ இறுக்க‌ம், க‌வ‌லை, ப‌ட‌ப‌ட‌ப்பு, ந‌டுக்க‌ம் இதுக‌ள் ஏற்ப‌ட‌ற‌து ந‌ம்ம‌ உட‌ம்புல‌ சேருற low density lippo ப்ரோட்டீன்க‌ள்'க‌ளால் தான். நாம் வாய்விட்டுச் சிரிக்கும்போது, இந்த‌ L.D.L. ப்ரோட்டீன்க‌ள்' இய‌ல்பு நிலையை அடைவ‌தால், ம‌ன‌சு ரிலாக்ஸ் ஆகி, ப‌ட‌ப‌ட‌ப்பு, ந‌டுக்க‌ம் இதுக‌ள் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ ஓடிவிடும்! இத‌ய‌மும் ர‌த்த‌ ஓட்ட‌த்தால் சீரடைந்து, அத‌ன‌ல் உள்ளுறுப்புக்க‌ள் எல்லாமே சீரா வேலை செய்ய‌ ஆர‌ம்பிச்சுடும்! வாய்விட்டுச் சிரிக்கிற‌து, உள்ளுறுப்புக் க‌ளைச் சீராக‌ வ‌ச்சுக்க‌ ந‌ம் செய்ற‌ 'ஜாகிங்' மாதிரின்னும் சொல்றாங்க‌ ம‌ருத்துவ‌ விஞ்ஞானிக‌ள். அத‌னால‌தான், சிரிங்க‌, சிரிங்க‌, ந‌ல்லா வாய்விட்டுச் சிரிங்க‌, அந்த‌ சான்ஸ் இல‌வ‌ச‌மா கிடைக்க‌ற‌துக்கு அடிக்க‌டி ஹ்யூம‌ர் க்ள‌ப் நிக‌ழ்ச்சிக‌ளுக்குப் வாங்க‌ன்னு எல்லாரையும் அழைக்கிறோம். புரியுதுங்க‌ளா? இதைப் ப‌டிச்சுட்டு, ஏதோ லேசா ஒரு ஸ்மைல் ப‌ண்ணிட்டு பேசாம‌ இருந்துடாதீங்க! சிரிப்பு'ங்க‌ற‌து உங்க‌ளுக்கு இல‌வ‌ச‌மா கிடைக்க‌ற ட்ரீட்மெண்ட். அதைத் தேடிப்போற‌துல அச‌ட்டையா இருந்தா, உங்க‌ உட‌ம்புல‌ இருக்க‌ற‌ உறுப்புக‌ளும் த‌ம் க‌ட‌மையை அச‌ட்டை ப‌ண்ணி.................அப்புற‌ம் என்ன‌ ஆகும்னு உங்க‌ளுக்கே புரியுதுதானே?
"வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகும்"க‌ற‌து வெறும் அடுக்குமொழி வாக்கிய‌ம் ம‌ட்டுமில்லே, அதை ம‌ற‌ந்துடாதீங்க‌!

கிரிஜா ம‌ணாளன் ... த‌ஞ்சை தாமு

Humour Club Of Thanjavur

Tamilnadu, South India.

2 comments:

goma said...

கிரிஜா மணாளன்
இவ்வளவு விரைவில் ஒரு வலைப் பூ மலர்ந்தது குறித்து மகிழ்ச்சி
தொடரட்டும் உங்கள் பிளாக் பயணம் .வாழ்த்துக்கள் .

GIRIJAMANAALAN said...

மிக்க நன்றி மேடம்! மன இறுக்கத்தைப்போக்கும் நகைச்சுவை மருத்துவ மனையாக இதை எண்ணி இங்கு வரும் நமது வாசகர்களுக்கு நம்மாலான சேவை செய்வோம். நன்றி!
>கிரிஜா மணாளன்.