Thursday, October 9, 2008

எனக்கே செட்' ஆகலே!


இலங்கை மன்னன் இராவணனின் சகோதரி அவர்க்கிட்ட கவலையோட கேட்டாள்:
"அண்ணா! இராமன் மேல நான் கொண்ட 'ஒருதலைக்காதல்' நிறைவேறுமா அண்ணா?"

இராவணன் சலிப்போடு சொன்னான்: "போடி லூஸு! அந்த சீதை மேல நான் கொண்ட "பத்து தலைக் காதலே" இன்னும் 'செட்' ஆகலே....நீ வேற!"

- அனுப்பியவர்: கோவை யாழி.

Tuesday, September 23, 2008


ஒரு சர்தார்ஜி, தன் மனைவியோடு ஹோட்டல்ல காபி சாப்பிட்டுக்கிட்டு இருந்தார். சூடான காபியை குடிக்கமுடியாம, மனைவி அதை ஆறவச்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்ததும் அவளை கோபத்தோட கிள்ளி, "காபி ஆறிப்போறதுக்குள்ல குடிச்சுத்தொலைடி! அதோ போர்டுல என்ன எழுதியிருக்கான் பாரு, HOT coffee Rs.5/-, COLD Cofee Rs. 10/-. அஞ்சு ரூபா தண்டம் வச்சுடாதே சனியனே!"

- ஆர். ராஜ்குமார் ("மங்களம் மைந்தன்")
திருவெறும்பூர், திருச்சி 620013.

Monday, September 15, 2008

நன்றி! நன்றி!!



செப்.14, ஞாயிறன்று சென்னை அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் நிகழ்த்திய "நகைச்சுவை அரங்கில்" நமது நகைச்சுவை வலைத்தளங்கள் சார்பாகத் தயாரித்து வழங்கப்பட்ட மேற்காணும் இலவச இதழைப் பாராட்டிய சிறப்பு விருந்தினர் "நகைச்சுவை வேந்தர்" திரு. பாக்கியம் ராமசாமி அவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றி!

- கிரிஜா மணாளன்.

Sunday, September 14, 2008

வாழ்த்துகிறோம்!


சென்னை-அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் 14.09.2008 ஞாயிறன்று நிகழ்த்தும் நகைச்சுவை அரங்கில் "நகைச்சுவை வேந்தர்" திரு. பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அம்பத்தூர் ரசிகர்களுக்குக் கிடைத்துள்ள இவ்வரிய வாய்ப்பினை அறிந்து, மகிழ்ந்து, அவர்களைப் பாராட்டுகிறோம்!
நகைச்சுவை மன்றத்தின் நிர்வாகக் குழு - குறிப்பாக நண்பர் திரு எஸ். சம்பத் ('சிரிப்பானந்தா') அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு வழங்க, "சிரிப்போம்! சிறப்போம்!!" என்னும் நகைச்சுவை இதழ் நமது வலைத்தளம் சார்பாக தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

- கிரிஜா மணாளன்.

Saturday, August 30, 2008

எங்களது இதயமார்ந்த நன்றி!





கடந்த 24.08.2008 அன்று 'உலக நகைச்சுவைச் சங்கத்தின் சென்னை மயிலாப்பூர் கிளையில் நிகழ்ந்த 'என்.எஸ்.கே. கலைவாணர் நினைவலைகள்' விழாவில், 'நகைச்சுவை வேந்தர்' தஞ்சை தாமு அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தளித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவைப் படைப்பாளர்களான கிரிஜா மணாளன், மங்களம் மைந்தன் (திருவெறும்பூர் ஆர். ராஜ்குமார்) ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். திரு. கிரிஜா மணாளன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கென தயாரித்து வெளியிட்ட "நூற்றாண்டு கண்ட கலைவாணர்" என்னும் சிறப்பிதழ் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.
"சென்னை டிராமா ஹவுஸ்" விவேக் ராஜகோபால் மற்றும் கலைஞர்கள் வழங்கிய நகைச்சுவை நாடகம் அரங்கத்தை அதிரவைத்தது.'குங்குமம்' வார இதழின் உதவி ஆசிரியர் திரு. வெ. நீலகண்டன் விழாவுக்கு வருகை தந்து, நிகழ்ச்சி முடியும்வரை ரசித்து, நகைச்சுவையாளர்களைப் பாராட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. பிரபல நகைச்சுவை வேந்தர் "பாக்கியம் ராமசாமி" அவர்கள் விழாவில் பங்கேற்ற நகைச்சுவையாளர்களைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்த மயிலை நகைச்சுவை சங்கச் செயலாளர் திரு ஹ்யூமர் வி. லட்சுமணன் அவர்களைப் பாராட்டுகிறோம்.

Wednesday, August 27, 2008

"தமிழிதழ்த் தேனீ" திரு. பட்டாபிராமன் அவர்களின் 'தொலைக்காட்சி நேர்காணல்'


எங்களது "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத் திருச்சி மாவட்டக் கிளை"யின் நெறியாளரும், 40 ஆண்டுகளாக தமிழ் இதழ்களைத் திரட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கோண்டு, 7 நகரங்களில் இதழ்கள் கண்காட்சி நடத்திப் புகழ்பெற்றவரும், தற்போதைய இதழ்கள் பற்றி 3 தொகுப்புகளை வெளியிட்டுள்ளவரும், 26 ஆண்டுகளாக லயன் சங்கப் பணிகளாற்றிக் கொண்டுள்ளவருமான லயன், பொறிஞர், "தமிழிதழ்த் தேனீ" திரு. க. பட்டாபிராமன் அவர்களின் "நேர்காணல் நிகழ்ச்சி" கடந்த 24.08.2008 அன்று "மக்கள் தொலைக்காட்சி"யில் ஒளிபரப்பாகியது. நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியவர் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் திரு. டி.கே.டி. பாலன் அவர்கள்.
இதன் மறு ஒளிபரப்பு, 28.08.2008 அன்று பகல் 12 மணிக்கு "மக்கள் தொலைக்காட்சி"யில் நிகழ்கிறது.
அனைவரும் கண்டு ரசித்து, சாதனையாளர் திரு. பட்டாபிராமன் அவர்களை வாழ்த்த வேண்டுகிறோம்.

கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.


சரசுவதி பஞ்சு
தலைவர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.

Tuesday, August 19, 2008


அன்புடன் வரவேற்கிறோம்!
24.08.2008, ஞாயிறு மாலை 04.30 மணியளவில், சென்னை மயிலாப்பூர் நகைச்சுவை மன்றம் வழங்கும் "கலைவாணர் என்.எஸ்.கே. நினைவலைகள்" நகைச்சுவை நிகழ்ச்சி, மயிலாப்பூர் ஆர். கே. மடம் சாலை, பி.எஸ். ஹையர் செகண்டரி ஸ்கூல் அரங்கில் நிகழவிருக்கிறது.
எங்கள் படைப்பாளர் அமைப்பின் நகைச்சுவை வேந்தர் திரு. தஞ்சை தாமு அவர்களும், நகைச்சுவையாளர் திரு. கிரிஜா மணாளன் அவர்களும் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
-------- உறுப்பினர்கள், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளை---------