Sunday, June 1, 2008
Monday, May 19, 2008
Monday, May 12, 2008
ரிஸல்ட் எப்படி?
சாதாரண 'ஒத்தைத்தலைவலி'ன்னு ஒரு கிராமவாசி அந்த டாக்டர்க்கிட்ட போனார். டாக்டராகப்பட்டவர், அவரை உக்காரவச்சி, நிக்கவச்சி, படுக்கவச்சி படாதபாடெல்லாம் படுத்திவச்சு ஏதோ பெரிய மருத்துவ உண்மையை கண்டுபிடிச்சிட்ட மாதிரி, "வேற வழியே இல்லே! லாப்ல போயி எல்லா டெஸ்ட்டும் எடுத்தாகணும்!" என்றார்.
கிலி பிடிச்சிப்போன அந்த கிராமத்து ஆள், தன் நிலையையும், தலையையும் நொந்துகொண்டவராய் புறப்பட்டுப்போனார். அடுத்த நாள். எல்லா டெஸ்ட்டுக்களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்த அவர், அவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவற்றைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி இவரை முறைத்தார்.
'என்னாச்சு டாக்டர், இதோட ரிஸல்ட் எப்படி இருக்கும்?..எனக்கு பயமா இருக்கு!" என்றார் கிராமவாசி. "ரிஸல்ட் படுமோசமாத்தான்யா இருக்கப்போவுது!........இந்த டெஸ்ட்டுக்களையெல்லாம் நான் எழுதிக்கொடுத்த க்ளினிக்குகள்ல எடுக்காம, நீர் எங்கேயோ போய் எடுத்துட்டு வந்திருக்கீறே? .....என் மச்சான் நாலு பேரோட க்ளினிக்குக்குப் போகாம நீர் வேற எங்கேயோ போனது அவனுகளுக்கு தெரிஞ்சா, அதோட ரிஸல்ட்டே வேற! அவனுங்க இதை என் வீட்டுக்காரிக்கிட்ட சொல்ல, அவ பத்ரகாளி மாதிரி ஆடி என்னை குதறி எடுத்துடுவா! என்று சொல்லி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டார்!
- கிரிஜா மணளன்
Thursday, May 8, 2008
ha...haa...haasyam: பல்வேறு பிரச்சனை .பல் வேறு பிரச்சனை
பல் டாக்டர்கள் எல்லோருமே நம்ம 'பல்ஸ்' ஸை பார்க்கறேன்னு, 'பர்ஸை;த்தான் பார்க்கறாங்க! கேவலம் ஒரு 'சொத்தை'ப்பல்லைப் பிடுங்கறதுக்கு டாக்டர்கிட்ட போனதுல, அந்த புண்ணியவாண், ஆறு மாசமா என்னை அலையவிட்டு, கடைசில என்னோட 'சொத்தை'யே பீஸா கேக்கற அளவுக்கு தன் 'மருத்துவ மகிமை'யைக் காட்டிவீட்டார்! பல் டாக்டர்களோட குறிக்கோளே.........DRILLING......, FILLING.........., கணிசமான ஒரு தொகைக்கு BILLING!
> கிரிஜா மணாளன்.
Wednesday, May 7, 2008
"கிரிஜானந்தா"வின் கிறுக்கு சிந்தனைகள்!============================================
1. துறவறம் பூண்ட சாமியார்களுக்கு 'சித்தி'யை அடைவதே குறிக்கோளாக இருக்கவேண்டும். தரிசனத்துக்காக பக்தர்களோடு வரும் அவர்களுடைய 'சித்தி'களை அல்ல!
2. ஆசைகளை ஒழித்தவர்களே 'சாமியார்' ராக ஆகவேண்டும். ஆசைகளை ஒளித்துவைத்துள்ளவர்கள் 'மாமியார்' வீட்டுக்கு (ஜெயில்)தான் போகவேண்டும்!
3. 'மடங்களுக்கும்' பெண்களுக்கும் இப்போதெல்லாம் அதிகத் தொடர்பு! ஏன்?.....பெண்களுக்கான 'நால்வகைப் பண்புகளில்' (அச்சம், நாணம், மடமை, பயிர்ப்பு) அவர்கள் 'மடம்' அதிகம் உள்ளவர்களாக இருப்பதால்தான்!
(சிந்தனைகள் தொடரும்)
Monday, May 5, 2008
Sunday, May 4, 2008
====================== டாக்டர் ஜோக் ================
டாக்டரிடம் போனார் ஒரு வாடிக்கை நோயாளி.
"டாக்டர்! நீங்க சொன்னபபடி தினமும் அதிகாலை வாக்கிங் போறேன்."
"ரொம்ப சந்தோஷம்!"
"வாக்கிங் போறபோது மனசு ப்ரீயா இருக்கும்னு சொன்னீங்க...எனக்கு அதுதான் இல்லே!"
"ஏன் அப்படி?"
"நான் கடன் வாங்கியிருக்கற அந்த ஈட்டிக்காரன் ரகுராம் சேட்டையும் அந்த ரோட்டுலேயே வாக்கிங் போகச் சொல்லியிருக்கீங்க......வட்டி பாக்கியைக் கேட்டு அவன் என்னை விரட்டிக்கிட்டு வர்றான்.. எனக்கு எப்படி மனசு ப்ரீயா இருக்கும்? முதல்ல அவனை வேற ஏரியாவுக்கு வெரட்டி விடுங்க டாக்டர்!"
- "உம்மணாமூஞ்சி"

