
அரசவையில் இருந்தாலும், வேறு எந்த இடங்களில் இருந்தாலும் பணியாட்களை அழைக்க :யாரங்கே? யாரங்கே?” என்று கர்ஜிக்கும் தங்கள் மன்னர் திடீரென்று தன் பழக்கத்தை மாற்றிக்கொண்டு விட்டாரே, என்ன காரணம்? என்று அமைச்சரும், தளபதியும் தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டி ருந்தார்கள். அதன் காரணத்தை அறிய அரண்மனைப் பணியாளன் ஒருவனையே விசாரித்து விடுவது என்று முடிவு செய்த அவர்கள் ஒருவனை அழைத்துக் கேட்டார்கள்.
அவன் சொன்னான்: “ஐயா! மன்னர் பள்ளியறைக்குள் நுழையும்வரை அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்பவன் நான். நேற்று பள்ளியறைக்குள் மன்னர் நுழையும்முன் தன் காலணிகளைக் கழற்றித் தருவதற்கு என்னை அழைப்பதற்காக “யாரங்கே? யாரங்கே?” என்று சத்தமிட்டார். அவ்வளவு தான், அவர் சத்தத்தைக் கேட்டு யாரோ இரு ஆண்கள் மகாராணியின் பள்ளியறைக்குள்ளிருந்து வெளியே தப்பியோடியதை நானே கண்டேன்!”
தம் தலையிலடித்துக்கொண்டு நகர்ந்தார்கள் அமைச்சரும், தளபதியும்!
- கிரிஜா மணாளன்