
Monday, May 19, 2008
Monday, May 12, 2008
ரிஸல்ட் எப்படி?
சாதாரண 'ஒத்தைத்தலைவலி'ன்னு ஒரு கிராமவாசி அந்த டாக்டர்க்கிட்ட போனார். டாக்டராகப்பட்டவர், அவரை உக்காரவச்சி, நிக்கவச்சி, படுக்கவச்சி படாதபாடெல்லாம் படுத்திவச்சு ஏதோ பெரிய மருத்துவ உண்மையை கண்டுபிடிச்சிட்ட மாதிரி, "வேற வழியே இல்லே! லாப்ல போயி எல்லா டெஸ்ட்டும் எடுத்தாகணும்!" என்றார்.
கிலி பிடிச்சிப்போன அந்த கிராமத்து ஆள், தன் நிலையையும், தலையையும் நொந்துகொண்டவராய் புறப்பட்டுப்போனார். அடுத்த நாள். எல்லா டெஸ்ட்டுக்களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்த அவர், அவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவற்றைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி இவரை முறைத்தார்.
'என்னாச்சு டாக்டர், இதோட ரிஸல்ட் எப்படி இருக்கும்?..எனக்கு பயமா இருக்கு!" என்றார் கிராமவாசி. "ரிஸல்ட் படுமோசமாத்தான்யா இருக்கப்போவுது!........இந்த டெஸ்ட்டுக்களையெல்லாம் நான் எழுதிக்கொடுத்த க்ளினிக்குகள்ல எடுக்காம, நீர் எங்கேயோ போய் எடுத்துட்டு வந்திருக்கீறே? .....என் மச்சான் நாலு பேரோட க்ளினிக்குக்குப் போகாம நீர் வேற எங்கேயோ போனது அவனுகளுக்கு தெரிஞ்சா, அதோட ரிஸல்ட்டே வேற! அவனுங்க இதை என் வீட்டுக்காரிக்கிட்ட சொல்ல, அவ பத்ரகாளி மாதிரி ஆடி என்னை குதறி எடுத்துடுவா! என்று சொல்லி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டார்!
- கிரிஜா மணளன்
Thursday, May 8, 2008
ha...haa...haasyam: பல்வேறு பிரச்சனை .பல் வேறு பிரச்சனை
பல் டாக்டர்கள் எல்லோருமே நம்ம 'பல்ஸ்' ஸை பார்க்கறேன்னு, 'பர்ஸை;த்தான் பார்க்கறாங்க! கேவலம் ஒரு 'சொத்தை'ப்பல்லைப் பிடுங்கறதுக்கு டாக்டர்கிட்ட போனதுல, அந்த புண்ணியவாண், ஆறு மாசமா என்னை அலையவிட்டு, கடைசில என்னோட 'சொத்தை'யே பீஸா கேக்கற அளவுக்கு தன் 'மருத்துவ மகிமை'யைக் காட்டிவீட்டார்! பல் டாக்டர்களோட குறிக்கோளே.........DRILLING......, FILLING.........., கணிசமான ஒரு தொகைக்கு BILLING!
> கிரிஜா மணாளன்.
Wednesday, May 7, 2008
"கிரிஜானந்தா"வின் கிறுக்கு சிந்தனைகள்!============================================
1. துறவறம் பூண்ட சாமியார்களுக்கு 'சித்தி'யை அடைவதே குறிக்கோளாக இருக்கவேண்டும். தரிசனத்துக்காக பக்தர்களோடு வரும் அவர்களுடைய 'சித்தி'களை அல்ல!
2. ஆசைகளை ஒழித்தவர்களே 'சாமியார்' ராக ஆகவேண்டும். ஆசைகளை ஒளித்துவைத்துள்ளவர்கள் 'மாமியார்' வீட்டுக்கு (ஜெயில்)தான் போகவேண்டும்!
3. 'மடங்களுக்கும்' பெண்களுக்கும் இப்போதெல்லாம் அதிகத் தொடர்பு! ஏன்?.....பெண்களுக்கான 'நால்வகைப் பண்புகளில்' (அச்சம், நாணம், மடமை, பயிர்ப்பு) அவர்கள் 'மடம்' அதிகம் உள்ளவர்களாக இருப்பதால்தான்!
(சிந்தனைகள் தொடரும்)
Monday, May 5, 2008
Sunday, May 4, 2008
====================== டாக்டர் ஜோக் ================
டாக்டரிடம் போனார் ஒரு வாடிக்கை நோயாளி.
"டாக்டர்! நீங்க சொன்னபபடி தினமும் அதிகாலை வாக்கிங் போறேன்."
"ரொம்ப சந்தோஷம்!"
"வாக்கிங் போறபோது மனசு ப்ரீயா இருக்கும்னு சொன்னீங்க...எனக்கு அதுதான் இல்லே!"
"ஏன் அப்படி?"
"நான் கடன் வாங்கியிருக்கற அந்த ஈட்டிக்காரன் ரகுராம் சேட்டையும் அந்த ரோட்டுலேயே வாக்கிங் போகச் சொல்லியிருக்கீங்க......வட்டி பாக்கியைக் கேட்டு அவன் என்னை விரட்டிக்கிட்டு வர்றான்.. எனக்கு எப்படி மனசு ப்ரீயா இருக்கும்? முதல்ல அவனை வேற ஏரியாவுக்கு வெரட்டி விடுங்க டாக்டர்!"
- "உம்மணாமூஞ்சி"

தன் மகனுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்க்கப்போன ஒரு அப்பாவிடம் ஆசிரியர் சொன்னார்: "உங்க பையனோட கையெழுத்தைப் பார்த்தா, இன்னிக்கு பூராவும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்!" பையனின் அப்பாவுக்கு ஏக மகிழ்ச்சி! "அட! அவ்வளவு மணி மணியா எழுதறானா சார்?" என்று கேட்க, முகத்தைச் சுளித்தபடி ஆசிரியர் சொன்னார்:பார்த்துக்கிட்டே...........யிருக்கலாம்னுதானே சொன்னேன், பயலோட கையெழுத்து புரிஞ்சாத்தானே சார் மேலே படிக்கமுடியும்?"
எங்கள் தஞ்சாவூர் நகைச்சுவை மன்றத்தின் நிகழ்ச்சியில் முன் வரிசையில் உட்கார்ந்து, மிகவும் ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்த ஒருவரை உன்னிப்பாகக் கவனித்த நான், நிகழ்ச்சி முடிந்து அவர் அரங்கத்தைவிட்டு வெளியே செல்லும்போது, அவரிடம் நிகழ்ச்சியைப்பற்றி கருத்தை அறியலாமென்று அவரை நெருங்கினேன். அவரது முகத்தில் சோகலட்சுமி தாண்டவமாடிக்கொண்டிருந்தாள்!
"என்ன சார், உள்ளே அப்படி குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சுக்கிட்டு இருந்தீங்க..... அதுக்குள்ளே இப்படி மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கிட்டு வீட்டுக்குப் போறீங்களே?" என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில்: "ம்...ம்....ம்...ம்...ம்...வூட்டுக்குப்போயி, என் வீட்டுக்காரி டீவி பாத்து முடிச்சு, எனக்கு ராத்திரி சாப்பாடு போடுற வரைக்கும் காத்துக் கெடக்கணுமே........என்னோட அந்த நெலைமையைப் புரிஞ்சுக்காம விசாரிக்க வந்துட்டீங்களாக்கும்!......போங்க சார்!"
(கவலையோடு வரும் மனங்களை நகைச்சுவை மருந்தால் குணப்படுத்தி, நாம் அனுப்பிக்கொண்டிருக்க, அவைகளை மீண்டும் நோயாளியாக்கும் இப்ப்படிப்பட்ட 'வைரஸ்' கிருமிகளை ஒழிக்க நாம் என்னசெய்வது?) - கிரிஜா மணாளன்.
Saturday, May 3, 2008
.........................அட்ஷய திரிதியை பற்றி ஒரு ஜோக்!.......................
(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்)
"உன் புருஷனை அரிச்சிக்கிட்டே இருந்தியே..அட்ஷய திரிதியைக்கு என்னதான் வாங்கினேடி?"
"ஹும், அந்த மனுஷரோட பிராணனைத்தான் வாங்க முடிஞ்சுது!"
....................................................................................................................................
அனுப்பியவர்: மங்களம் மைந்தன், திருவெறும்பூர், தமிழ்நாடு.
கணவன்மார்களுக்கு ஓர் எச்சரிக்கை!
ஆடி மாதம் துவங்கி, அடுத்த ஆடிவரை உங்கள் அருமந்தி.....ஸாரி....அருமந்த மனைவியின் ஆசையை நிறைவேற்ற நீங்கள் ஊரிலுள்ள துணிக்கடைகளுக்கெல்லாம் சோற்று மூட்டையுடன் 'சுற்றுலா" போவது போதாதென்று, உங்கள் பொறுமையையும், "பர்ஸையும்" சோதிக்கும் கஷ்ட காலமும் வந்துவிட்டது "அட்ஷய திரிதியை" என்ற பெயரில்! இது அவர்களுக்கு "பொன்னான காலம்" என்றால் ஆண்களாகிய நமக்கு "மண்ணாகும் காலம்". அடுத்த வீட்டுக்காரி அரை சவரன் வாங்கினால், தான் ஆறு சவரன் வாங்கி ஆட்டிக்கொண்டு அலைய நினைக்கும் ஆசைபிடித்த பெண் ஜென்மங்கள் மனைவிகளாக வாழும் யுகம் இது! மனைவி உங்களிடம் "அட்ஷய திரிதியை அன்னிக்கு தங்கம் நம்ம வீட்டுக்கு வந்தா, லட்சுமி கடாட்சம் பொங்குமுங்க!" என்று உங்களுக்கு தூபம் போட்டால், மசியவேண்டாம். "நீயே எனக்கு தங்கம் தானேடி! நீயே இந்த வீட்டுக்கு லட்சுமிதானேடி!" என்று "சோப்பு போட்டு" பாருங்கள். மசிந்தால் அது உங்கள் அதிர்ஷ்டம்....இல்லையேல் அது உங்கள் தலையில் அந்த ப்ரம்மா ஸ்ட்ராங்கா எழுதி வச்ச தலையெழுத்து!
> அப்பாவிக் கணவண்மார்களின் மனநலம் காக்கும் இரக்கசிந்தனையுடன் இந்த அறிவுரையை வழங்குபவர்.... > கிரிஜா மணாளன்.
Friday, May 2, 2008
ஆறிப்போனா நல்லா இருக்காதுங்க!
(ஒரு டெலிபோன் உரையாடல்)
"அலோ!..... கூடுவாஞ்சேரிலேயிருந்து குப்புசாமி பேசறேன்......என் பையனுக்கு உங்க பொண்ணைப் பாக்க இன்னிக்கு வர்றாதா சொல்லியிருந்தோமுல்ல, எத்தனை மணிக்கு நாங்க வரலாம்?"
"பொண்ணு ஆபீஸ்லேயிருந்து 6 மணிக்கு வருவாள்ங்க. நீங்க 7 மணிக்கு வாங்களேன்!"
"சரி........டிபன் ரெடி பண்ணிட்டீங்களா?"
"அதெல்லாம் அப்பவே ரெடி ஆயிட்டுதுங்க!"
"ரொம்ப சந்தோஷம்!....அப்ப ஒண்ணு பண்றோம்......இப்ப உங்க வீட்டுக்கு வந்து டிபனை முடிச்சிக்கிட்டு வேற ஒரு இடத்துக்கு போயி ஒரு பொண்ணைப் பாத்துட்டு வந்துடுறோம்....உங்க பொண்ணு மெதுவா வரட்டும்........நம்ம பொண்ணை எப்பவும் பாத்துக்கலாம், ......டிபன் ஆறிப்போயிட்டுதுன்னா அவ்வளவு நல்லா இருக்காதுங்களே!"
"டொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
- கிரிஜா மணாளன்.
Thursday, May 1, 2008
=========================
எங்கள் நகைச்சுவை மன்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லா உறுப்பினர்களும் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தபோது, முன் வரிசையில் இருந்த ஒருவர் மட்டும் முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் 'கம்'மென்று உட்கார்ந்திருந்தார். மேடையில் நகைச்சுவை வழங்கிக்கொண்டிருந்தவரோ ஓர் பிரபலமான நகைச்சுவையாளர். அவர் பேச ஆரம்பித்தாலே அரங்கமே சிரிப்பலைகளால் அதிரும். அப்படியிருக்க, இவர், அதுவும் மேடையின் முன்னால் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பவர் மட்டும் ஏன் இப்படி? அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவரை இது பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார்:"அவர் பக்கத்து சீட்ல குண்டா, கறுப்பா ஒரு லேடி உக்காந்திருந்தாங்களா சார்?"" ஆமாம்!"'அதுதான் காரணம்! அது அவரோட மனைவி சார்! அந்த அம்மா முன்னால அவர் வாய் திறக்கவே பயப்படுவார். அவரோட கண்ட்ரோல் சுவிட்ச்சே அந்த அம்மாதான்!.......வீட்டுல டாய்லெட் போறதுக்குக்கூட மனைவிக்கிட்ட பர்மிஷன் வாங்கிக்கிட்டுத்தான் போவார்னா பாத்துக்குங்களேன்!"(அடப்பாவிகளா! மனுஷப்பிறவிக்கு மட்டுமே கடவுள் கொடுத்திருக்கற அந்த 'சிரிப்பு'ங்கற சொத்தை, மனைவிகள்கிட்ட 'அடகு' வச்சிட்டீங்களே!)
- கிரிஜா மணாளன்
(இதனால்தான் நான் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு போகும்போது என் வீட்டுக்காரியையும் அழைச்சிக்கிட்டுப் போறதில்லே!.........ஒவ்வொரு தடவையும் பர்மிஷன் வாங்கிக்கிட்டு சிரிக்கறது எனக்குப் பிடிக்காத விஷயம் சார்)