பிஷ்டாசீர்வாதம்!
===============
முகூர்த்த நேரம் நெருங்க எல்லோரும் கையில் அட்சதையோடு. போட்டோ, வீடியோக்காரர்கள் எல்லோரும் மேடையில் மணமக்களை "கவர்" பண்ண, தயாராகிறார்கள். மாங்கல்யம் அணிவிக்கத் தயாராகி, கெட்டி மேளம் முழங்கு கிறது. மேடைக்குக் கீழே சபையிலிருந்தோர் “வீசி எறியும்” 'அட்சதை"யில் ஒரு அரிசிகூட மணமக்கள் தலையில் போய் விழுவதில்லை! ஆமாம், தம் கடமையில் கண்ணாயிருந்த புகைப்படக்காரர்களின் "பின்பகுதி"யில் எல்லாம் போய் விழுந்து, தெறித்து ஆசீர்வாதம் செய்கின்றன!
முகூர்த்த நேரத்தில் இப்படி எல்லோருடைய "அட்சதை ஆசீர்வாத"ங்களையும் பெறும் “பேறு பெற்றவை” புகைப்படக்காரர்களின் "பின் பகுதி"களே..என்ற உண்மை நமக்குப் புலனாகிறதல்லவா!
==================
"வாய்க்கொழுப்பு!"
==================
சில மனைவிகளின் உடம்பிலுள்ள 'கொழுப்பில்', 90% 'வாய்க்கொழுப்பு'தான் என்று 'அகில உலக அப்பாவிக் கணவன்மார்கள் கூட்டமைப்பு' எடுத்த ஆய்வு கூறுகிறது.
அதற்கு சில எடுத்துக்காட்டுகள்!
------------------------------------------------------------------------------------
(கணவன் - மனைவி உரையாடல்)
"துவையல்..'மிக்ஸில வேணாம்டி!......'அம்மி'ல வச்சு அரைச்சாத்தான் 'டேஸ்ட்'டா இருக்கும்!"
"ம்...ம்...ம்...ருசி கேக்குற உங்க நாக்கத்தான் அம்மில வச்சு அரைக்கணும்!"
-----------------------------------------------------------------------------
"இன்னிக்கு சனிக்கிழமையாச்சே........நீ ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகலையா?"
"ம்....ம்....ம்..எதுக்கு? .....இங்கதான் தினமும் உங்க மூஞ்சிய பாக்கறேனே!"
=======================================================
- கிரிஜா மணாளன்
Monday, June 29, 2009
சமுதாய ஒப்பாரி! (நகைச்சுவை)
எங்கள் “கூகுள் - அன்புடன் குழும”த்தில் உறுப்பினர்கள் பங்கு பெறும் நகைச்சுவைப் பகுதிகளில் “சமுதாய ஒப்பாரி” என்னும் ஓர் பகுதி உண்டு. இப்பகுதியில் அனைவரும் சமுதாய அவலங்கள் பற்றி தங்கள் கற்பனையில் “ஒப்பாரி” பாடலாம். சுடிதாரின் 'உடன் பிறப்பான' துப்பட்டா, தன் சோகத்தை வெளிப்படுத்துவதுபோல் அமைத்த 'ஒப்பாரி' பாடல் இது.
துப்புக் கெட்டத் தனமாத்தான்
"துப்பட்டா'வா பொறந்துட்டேன் - என்னெ
தப்புத் தப்பா உடுத்திக்கிட்டு
தறிகெட்டு அலையுறீங்க.............
மடிசாரா பொறந்துருந்தா
மாமிகள கவர்ந்துருப்பேன்!
சுடிதாரு ஒடன்பொறந்து
சொகங்கெட்டுப் போனேனே......
கோவணமா பொறந்துருந்தா
கோடிபேரு மானம் காப்பேன் - இந்த
பாவசென்மம் எடுத்துப்புட்டு
பவுசுக் கெட்டு நிக்கறேனே......
மாருமேல போட்டுக்கிட்டா
மானந்தான் காத்துடலாம் - சும்மா
'பேருக்கு'ப் போட்டுக்கிட்டா
பெரயோசனம் ஏதுமில்லே....
கழுத்தச் சுத்தி போட்டுக்கிட்டு
கண்ட ஸ்டைலு பண்ணுறீக..- எவனும்
இழுத்துக்கிட்டு போறதுக்கு
எடங்குடுக்கப் பாக்குறீக....!
கண்ட கண்ட எடத்துலெல்லாம்
கட்டிக்கிட்டு அலையறீக...- அத
காணச் சகிக்கலேம்மா - ஒங்க
கண்றாவி நாகரீகம்!
உக்காரும் எடத்துலெல்லாம்
ஒட்டிக்கிற தூசித் தட்ட
'துப்பட்டா' நானென்ன
'தொடப்பமா' ஒங்களுக்கு......?
பின்னால தொங்கவுட்டா
'பெரயோசனம்' இல்லையம்மா..
தன்னால தெரிஞ்சிக்கணும்..- நா
'தண்டோரா' போடமாட்டேன்!
தாவணியத்தான் மறந்தீக
தமிழ்நாட்டு பொண்ணுகள்ளாம்
பாவமாத்தான் இருக்கு - உங்கள
பாக்கறவன் பார்வையால!
முந்தானையும் தாவணியும்
முழுசாவே மறந்தாச்சு - இப்போ
எந்த பொண்ணும் அதுகள
ஏறெடுத்தும் பாக்கறதில்லே!
பொண்ணோட மானங்காக்கும்
பொறுப்போட நா வந்தேன் - அத
எண்ணாம திரியுதுக
இந்தக்கால பொண்ணுங்கள்லாம்......
கெட்ட காலம் பொறந்துடுச்சி
கேடுகெட்ட ஒலகத்துல - இவுக
பட்டாத்தான் புத்திவரும்
பாக்கத்தானே போறேன் நா!....
============================
பாடல் : கிரிஜா மணாளன்
========================
துப்புக் கெட்டத் தனமாத்தான்
"துப்பட்டா'வா பொறந்துட்டேன் - என்னெ
தப்புத் தப்பா உடுத்திக்கிட்டு
தறிகெட்டு அலையுறீங்க.............
மடிசாரா பொறந்துருந்தா
மாமிகள கவர்ந்துருப்பேன்!
சுடிதாரு ஒடன்பொறந்து
சொகங்கெட்டுப் போனேனே......
கோவணமா பொறந்துருந்தா
கோடிபேரு மானம் காப்பேன் - இந்த
பாவசென்மம் எடுத்துப்புட்டு
பவுசுக் கெட்டு நிக்கறேனே......
மாருமேல போட்டுக்கிட்டா
மானந்தான் காத்துடலாம் - சும்மா
'பேருக்கு'ப் போட்டுக்கிட்டா
பெரயோசனம் ஏதுமில்லே....
கழுத்தச் சுத்தி போட்டுக்கிட்டு
கண்ட ஸ்டைலு பண்ணுறீக..- எவனும்
இழுத்துக்கிட்டு போறதுக்கு
எடங்குடுக்கப் பாக்குறீக....!
கண்ட கண்ட எடத்துலெல்லாம்
கட்டிக்கிட்டு அலையறீக...- அத
காணச் சகிக்கலேம்மா - ஒங்க
கண்றாவி நாகரீகம்!
உக்காரும் எடத்துலெல்லாம்
ஒட்டிக்கிற தூசித் தட்ட
'துப்பட்டா' நானென்ன
'தொடப்பமா' ஒங்களுக்கு......?
பின்னால தொங்கவுட்டா
'பெரயோசனம்' இல்லையம்மா..
தன்னால தெரிஞ்சிக்கணும்..- நா
'தண்டோரா' போடமாட்டேன்!
தாவணியத்தான் மறந்தீக
தமிழ்நாட்டு பொண்ணுகள்ளாம்
பாவமாத்தான் இருக்கு - உங்கள
பாக்கறவன் பார்வையால!
முந்தானையும் தாவணியும்
முழுசாவே மறந்தாச்சு - இப்போ
எந்த பொண்ணும் அதுகள
ஏறெடுத்தும் பாக்கறதில்லே!
பொண்ணோட மானங்காக்கும்
பொறுப்போட நா வந்தேன் - அத
எண்ணாம திரியுதுக
இந்தக்கால பொண்ணுங்கள்லாம்......
கெட்ட காலம் பொறந்துடுச்சி
கேடுகெட்ட ஒலகத்துல - இவுக
பட்டாத்தான் புத்திவரும்
பாக்கத்தானே போறேன் நா!....
============================
பாடல் : கிரிஜா மணாளன்
========================
Saturday, January 31, 2009
எங்கள் இதய அஞ்சலி!
Thursday, January 22, 2009
"கணினிப் படங்கள்" தரும் நகைச்சுவை!
Monday, January 12, 2009
Sunday, December 14, 2008
சிரிப்போம்! ....சிறப்போம்!!
Friday, October 17, 2008
மாமன்னன் "இழிகுலவர்மன்"!
அரசவையில் இருந்தாலும், வேறு எந்த இடங்களில் இருந்தாலும் பணியாட்களை அழைக்க :யாரங்கே? யாரங்கே?” என்று கர்ஜிக்கும் தங்கள் மன்னர் திடீரென்று தன் பழக்கத்தை மாற்றிக்கொண்டு விட்டாரே, என்ன காரணம்? என்று அமைச்சரும், தளபதியும் தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டி ருந்தார்கள். அதன் காரணத்தை அறிய அரண்மனைப் பணியாளன் ஒருவனையே விசாரித்து விடுவது என்று முடிவு செய்த அவர்கள் ஒருவனை அழைத்துக் கேட்டார்கள்.
அவன் சொன்னான்: “ஐயா! மன்னர் பள்ளியறைக்குள் நுழையும்வரை அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்பவன் நான். நேற்று பள்ளியறைக்குள் மன்னர் நுழையும்முன் தன் காலணிகளைக் கழற்றித் தருவதற்கு என்னை அழைப்பதற்காக “யாரங்கே? யாரங்கே?” என்று சத்தமிட்டார். அவ்வளவு தான், அவர் சத்தத்தைக் கேட்டு யாரோ இரு ஆண்கள் மகாராணியின் பள்ளியறைக்குள்ளிருந்து வெளியே தப்பியோடியதை நானே கண்டேன்!”
தம் தலையிலடித்துக்கொண்டு நகர்ந்தார்கள் அமைச்சரும், தளபதியும்!
- கிரிஜா மணாளன்
Subscribe to:
Posts (Atom)